சுற்றுலாத்துறையில் ஈடுபடுபவர்களுக்கு சமூக நலத்திட்டமும் ஓய்வூதியத் திட்டமும் இந்த வருடம் அறிமுகப்படுத்தப்படும் என சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் சமிந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (05) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
சுற்றுலா வணிகத்தை மேம்படுத்த, ஊக்குவிக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த பிரதி அமைச்சர், இதுவரை 100 சுற்றுலா தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், தேவையான வசதிகளை வழங்க ஒவ்வொரு தலத்திற்கும் 10 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் கூறினார்.க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் சுற்றுலாப் பயணிகளுக்கான பொழுதுபோக்கு மையங்களை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.