புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசித்தவர், விடுமுறையில் வவுனியாவுக்கு சென்ற நிலையில் முரண்பாடொன்றில் அடைத்து கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உறவினர் ஒருவருடன் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறே இந்தக் கொலைக்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா வடக்கு சின்னடம்பன் பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் செல்லத்துரை விமலநாதன் என்ற 66 வயது நபரே கொல்லப்பட்டார்.
கொல்லப்பட்ட நபர் தனது வீட்டில் உறவினர் ஒருவருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார்.
இதன்போது இருவருக்கும் இடையே தர்க்கம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியுள்ளது.
இதன்போது சுவிஸிலிருந்து வந்தவரை அவரின் உறவினர் இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளார்.
இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் 60 வயதான சந்தேகநபரை கனகராயன் குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு பதில் நீதிபதி சிரேஷ்ட சட்டத்தரணி தி.திருவருள் சென்று சடலத்தை பார்வையிட்டார்.