சூரியக்கல பாவனையை அதிகரிப்பதற்கு வலுசக்தி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும்: லக்ஸ்மன் கிரியெல்ல எம்.பி

0
109

மின்சாரக் கட்டணத்தின் அதிகரிப்பினை அடுத்து சூரியக்கல பாவனையை அதிகரிப்பதற்கு வலுசக்தி அமைச்சு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஸ்மன் கிரியெல்ல வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேசிய சபை மீதான பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் மின்சாரக்கட்டண அதிகரிப்பினையடுத்து மக்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளமை யாவரும் அறிந்த விடயமாகும்.

எனவே இங்கு தேரர்கள் உள்ளிட்டவர்கள் விடுத்துள்ள கோரிக்கையினை ஏற்று பாடசாலைகள் மற்றும் வணக்க ஸ்தலங்களில் சூரியக்கல பாவனையை அதிகரிப்பதற்கு வலுசக்தி அமைச்சு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

இது குறித்து வலுசக்தி அமைச்சு முன்னரே குறிப்பிட்டிருக்கின்றது.

எனவே இது குறித்து விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் உரிய பதிலினை இந்த உயரிய சபையில் அறிவிக்க வேண்டும்.

ஏனெனில் சூரியக்கல பாவனையை அதிகரிப்பதற்கு தனது அமைச்சு மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும், எதிர்காலத்தில் அதற்கான திட்டங்களும் வகுக்கப்படும் எனவும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அவர்கள் முன்னர் குறிப்பிட்டிருந்தார்.

எனவே இதற்கான நடவடிக்கைகள் என்னவென்று விடயதான அமைச்சர் குறிப்பிட வேண்டும்