பாலிவுட்டில் மிகவும் பிரபலமானவர் நடிகை சோனாக்ஷி சின்ஹா. 2010 ஆம் ஆண்டு ‘தபாங்’ திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அந்த படத்தில் அவருக்கு ஒரு சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும்இ தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அதனைத்தொடர்ந்து அவர் நடித்த ‘ரவுடி ரத்தோர்’ பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. தமிழில் 2014 ஆம் ஆண்டு வெளியான ‘லிங்கா’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார்.
அதன் பிறகு அவர் நடித்த ‘ஆக்சன் ஜாக்சன்’இ ‘தேவர்’இ ‘அகிரா’இ ‘ஃபோர்ஸ் 2’இ ‘நூர்’இ ‘கந்தானி ‘ஷஃபாகானா’ என அடுத்தடுத்து வெளியான 11 படங்களும் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது. இதனிடையே சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘தி டைமண்ட் பஜார்’ வெப் சீரிஸ் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. வெப் சீரிஸ்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.
தற்போது ‘நிகிதா ராய் அண்ட் தி புக் ஆஃப் டார்க்னஸ்’ மற்றும் கக்குடா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சோனாக்ஷி சின்ஹாவின் திருமணம் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சோனாக்ஷி சின்ஹா நடிகர் சாஹீர் இக்பால் என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் ஜூன் 23ஆம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாகக் கூறப்படுகிறது.
அவர்களது நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களைத் தவிரஇ ஹீராமண்டி குழுவினருக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. திருமணக் கொண்டாட்டங்கள் மும்பையில் உள்ள பாஸ்டியனில் நடைபெற உள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது.