ஜனநாயக இடதுசாரி முன்னணி, வன்னியில் வேட்புமனுத் தாக்கல்

0
78

வன்னி மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவினை ஜனநாயக இடதுசாரி முன்னணி இன்றையதினம் தாக்கல் செய்தது.எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வன்னித்தேர்தல் மாவட்டத்தில் தேசிய ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக இடதுசாரி முன்னணி ஆகிய இரு கட்சிகளும் இணைந்து கூட்டணியாக தேர்தலில் போட்டியிடுகின்றது.

இதனையடுத்து வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் இன்று வேட்புமனுவினை தாக்கல் செய்துள்ளது. இதன்போது வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.