ஜனாதிபதி அலுவலக பரிந்துரையின் பின்னர் வாகன இறக்குமதி தொடர்பில் தீர்மானிக்கப்படும் – சியம்பலாபிட்டிய

0
89
ஜனாதிபதி செயலகத்தினால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை பெற்றுக்கொண்டதன் பின்னர் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.நேற்றைய தினம் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், நாட்டின் வாகன சந்தையை பாதிக்கும் என்பதால், வாகன இறக்குமதியை அனுமதிக்கும் குறிப்பிட்ட திகதியை அறிவிக்க முடியாது என தெரிவித்தார்.நான் திகதியை அறிவித்தால் உள்ளூர் வாகன விற்பனையில் பாரிய மாற்றம் ஏற்படும் என சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.