ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளர் அநுரகுமார திசநாயக்க தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். தற்போதைய நிலவரப்படி அனுர குமார திசநாயக்க 39.26 சதவீதமும் மொத்தவாக்குகளாக 2,513,803 பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
சஜித் 34.30 சதவீதமாக 2,196,305 வாக்குகளும், ரணில் 17.48 சதவீதமாக 1,119,191 வாக்குகளையும், பா.அரியநேந்திரம் 3.29 சதவீதமாக 210,518 வாக்குகளும், நாமல் 2.34 சதவீதம் 149,861 வாக்குகள் பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.