ஜனாதிபதியின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க நியமனம்

0
251

ஜனாதிபதியின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகித்த சந்தர்ப்பங்களில், சமன் ஏக்கநாயக்க அவரது செயலாளராக கடமையாற்றியிருந்தார்.
இந்நிலையில், இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இன்று ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன்
பின்னர், சமன் ஏக்கநாயக்க ஜனாதிபதியின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அவர் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்