ஜேர்மனியின் கன்சர்வேட்டிவ் கூட்டணி கட்சியின் தலைவரான பிரீட்ரிக் மெர்ஸ் , பாராளுமன்றத்தில் 2 ஆம் கட்ட வாக்கெடுப்பில் வெற்றி பெற்று ஜேர்மனியின் புதிய சான்சிலராக தெரிவாகியுள்ளார்.
முதல் கட்ட வாக்கெடுப்பில், மொத்தம் 630 ஆசனங்கள் கொண்ட பாராளுமன்றத்தில் 316 வாக்குகளை பெறவேண்டிய நிலையில், மெர்ஸுக்கு 310 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.
இந்நிலையில்,இரண்டாம் கட்டக வாக்கெடுப்பில் மெர்ஸ் 9 வாக்குகள் மேலதிகமாகப் பெற்று 325 வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.
கடந்த பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி ஜேர்மனியில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பிரீட்ரிக் மெர்ஸ் வெற்றிப் பெற்றார்.
1955ஆம் ஆண்டு பிறந்த பிரீட்ரிக் மெர்ஸ் , 1972ம் ஆண்டிலிருந்தே சிடியு கட்சியில் இணைந்து பயணித்து, பல்வேறு பதவிகளையும் வகித்துள்ளார்.
1989இல் ஐரோப்பிய பாராளுமன்றத்திலும், 1994இல் ஜேர்மனி பாராளுமன்றத்திலும் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.
2000ஆம் ஆண்டில் சிடியு கட்சியின் பாராளுமன்றத் தலைவரானார்.
2009ஆம் ஆண்டு கட்சிக்குள் ஏற்பட்ட சில சிக்கல்களால் மெர்ஸ் அரசியலை விட்டு வெளியேற முடிவு செய்தார்.
சுமார் 12 ஆண்டுகள் அரசியலில் ஈடுபடாமல் புகழ்பெற்ற வழக்கறிஞராக பெருநிறுவனங்களில் பணியாற்றினார்.
கடந்த 2021ஆம் ஆண்டு ஏஞ்சலோ மெர்க்கல் அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்தபோது, மெர்ஸ் மீண்டும் தீவிர அரசியலில் நுழைந்தார்.
2022 இல் சிடியு அவரை கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுத்தது. பின்னர் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளராகவும் முன்னிறுத்தப்பட்டார். தற்போது அவரது தலைமையில் சிடியு கட்சிக்கு மிகப்பெரிய வெற்றியும் கிடைத்துள்ளது.
இந்நிலையில், ஜேர்மனியின் சான்சிலராக தெரிவாகியுள்ள மெர்ஸ் தனது நாட்டு மக்களின் நம்பிக்கையை பலப்படுத்த விரும்புவதாகக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.