மட்டக்களப்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சின்ன ஊறணி கிராம சேவையாளர் பிரிவு குடும்பங்களின் குழந்தைகளுக்கான பால்மா இன்று வழங்கி வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு சின்ன ஊறணி கிராம சேவையாளர் பிரிவு கொரோனா தொற்றின் காரணமாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இக்கிராமத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தெரிவு செய்யப்பட குடும்பங்களில் குழந்தைகளுக்கான பால்மா இன்று வழங்கி வைக்கப்பட்டது.

டான் தொலைக்காட்சி நிறுவனத்தின் மட்டக்களப்பு அலுவலகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்லடி டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலய நிர்வாக நன்கொடையாளர்களின் உதவியுடன் குழந்தைகளுக்கான பால்மா வழங்கி வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு கல்லடி டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலய பங்கு தந்தை அருட்திரு லோரன்ஸ் லோகநாதன் அடிகளார், ஆலயநிர்வாக சபை உறுப்பினர்கள், டான் தொலைக்காட்சி நிறுவனத்தின் மட்டக்களப்பு அலுவலக உத்தியோகஸ்தர்கள் ஆகியோர் குழந்தைகளுக்கான பால்மா வகைகளை வழங்கி வைத்தனர்.

பயணக்கட்டுப்பாட்டுக் காலப்பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதி மக்களுக்கு மட்டக்களப்பு கல்லடி டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலய நிர்வாகத்தினர் பல்வேறு உதவிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
