ட்ரம்ப் அரசில் விவேக் ராமசாமிக்கும் இலான் மஸ்க்கிற்கும் மிக முக்கிய பதவி

0
48

பிரபல தொழிலதிபர்களான இலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி ஆகியோர் அமெரிக்கா அரசாங்கத்தின் திறன் துறைக்குத் தலைமை வகிப்பார்கள் என அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்கா ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற ட்ரம்ப் தனது அரசில் பணியாற்றுபவர்களைத் தேர்வு செய்து வருகிறார்.

இதன்படி தேர்தல் பிரசாரத்தின் போது டொனால்ட் ட்ரம்ப்இ தான் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால் இலான் மஸ்கிற்கு அமைச்சர் பதவியையோ அல்லது வெள்ளை மாளிகை ஆலோசகர் பதவியையோ வழங்குவதாகக் குறிப்பிட்டார். இந்தநிலையில் இலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி ஆகியோர் அமெரிக்க அரசின் திறன் துறைக்குத் தலைமை வகிப்பார்கள் என ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த இருவரும் தனது அரசாங்கத்தில் இணைவதன் ஊடாக வீண் செலவுகளைக் குறைக்கவும் அமெரிக்காவைக் காப்பாற்றுவதற்கும் உதவும் என குறிப்பிட்டுள்ளார்.