ஆசியாவின் மிகப்பெரிய செல்வந்தராக தான் உயர்ந்தமைக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி காரணம் எனக் கூறப்படுவதை கௌதம் அதானி நிராகரித்துள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த செவ்வியில், இது அடிப்படையற்ற குற்றச்சாட்டு எனக் கூறியுள்ளார். பிரதமர் மோடியும் தானும் குஜராத்தை சேர்ந்தவர்கள் என்ற விடயம், இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு தன்னை ஒரு மென் இலக்காக்கியுள்ளது. எனது வெற்றிக்கு எந்தத் தலைவரும் காரணமில்லை” எனக் கூறியுள்ளார்.
கௌதம் அதானி தலைமையிலான அதானி குழும நிறுவனங்கள் தொடர்பாக பல குற்றச்சாட்டுகளை சுமத்தி, அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையையடுத்து, அதானி குழுமத்தின் சந்தை மூலதன மதிப்பு 100 பில்லியன் அமெரிக்க டொலர்களினால் வீழ்ச்சியடைந்துள்ளது.
ஆசியாவின் மிகப் பெரிய செல்வந்தர் என்ற அஸ்தஸ்தையும் அதானி இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது