தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டுக் கோரிக்கை ஜெனிவாவில் சமர்ப்பிப்பு

0
156

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முற்படுத்த வேண்டும் என்று ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு சமர்ப்பித்த கூட்டுக் கோரிக்கை, ஜெனிவா அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டது.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் பேச்சாளரும் ஆறு கட்சிகளின் ஒருங்கிணைப்பாளருமான கு.சுரேந்திரன் இந்தக் கோரிக்கை மனுவை பேரவையில் வாசித்தார்.
மனித உரிமைகள் ஆணையாளருக்கு அனுப்பப்பட்ட அந்த மனுவில், கடந்த காலத்தில் இடம்பெற்ற தமிழினத்தின் மீதான மனித உரிமைகள் மீறல்கள், போர் குற்றங்களுக்கு இலங்கையை பொறுப்புக்கூற செய்ய வேண்டும்.
இலங்கையை சர்வதேச குற்றவியில் நீதிமன்றில் பாரப்படுத்த வேண்டும் என்ற விடயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.