தாக்குதலை தொடங்கிய பாகிஸ்தான் – இந்திய இராணுவம் பதிலடி

0
44

இந்திய – பாகிஸ்தான் எல்லை பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் தாக்குதலை தொடங்கியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பந்திபோராவில் பயங்கரவாதிகள், இந்திய பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது.

எல்லையில் துப்பாக்கிச்சூடு நடத்திய பாகிஸ்தான் இராணுவத்திற்கு இந்திய இராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் சில இடங்களில் சண்டை நடைபெற்று வருவதால் பதற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22ஆம் திகதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

இந்த தாக்குதல் சம்பவத்துக்கு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான டி.ஆர்.எப். பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.