திங்கள் ஊரடங்கு நீக்கப்படமாட்டாது

0
462

நவம்பர் மாதம் 2 ஆம் திகதி காலை 5 மணிக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்படுவது 29 ஆம் திகதி நள்ளிரவு முதல் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் பிரதேசங்களுக்கு மட்டுமே.

அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்பொழுது தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நவம்பர் மாதம் 2 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 5 மணிக்குப் பின்னரும் மீண்டும் அறிவிக்கும் வகையில் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்படும்.