தியத்தலாவ ஃபொக்ஸ்ஹில் விபத்து: படுகாயமடைந்த பாடசாலை மாணவி நேற்றிரவு உயிரிழப்பு!

0
104

தியத்தலாவ – நரியாகந்தை ஃபொக்ஸ்ஹில் கார் ஓட்டப் பந்தயத்தின் போது படுகாயமடைந்த பாடசாலை மாணவி ஒருவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.

பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த குறித்த மாணவி 24 நாட்களுக்குப் பின்னர் நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.

கடந்த மாதம் 21 ஆம் திகதி இந்த விபத்து இடம்பெற்றது.
இந்த நிலையில் குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.