Home சினிமா தியேட்டரில் காட்சிகள் ரத்து.. வந்த முக்கிய அறிவிப்பு

தியேட்டரில் காட்சிகள் ரத்து.. வந்த முக்கிய அறிவிப்பு

0
தியேட்டரில் காட்சிகள் ரத்து.. வந்த முக்கிய அறிவிப்பு

தமிழ்நாட்டில் மக்களின் முக்கிய பொழுதுபோக்காக இருந்து வருவது சினிமா தியேட்டர்கள் தான்.

தற்போது தியேட்டரில் ஒரு நாள் மட்டும் காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், அந்த தேதியில் மட்டும் பகல் காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

மக்கள் வாக்களிக்க செல்ல வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. இருப்பினும் இரவு காட்சிகள் வழக்கம் போல திரையிடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.