திராய்மடு பனிச்சையடி ‘ஐ’ வீதி
தார் வீதியாக அபிவிருத்தி

0
168

எழுச்சி மிகு’ மாநகரம் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குட்பட்ட திராய்மடு இரண்டாம் வட்டாரத்திற்குட்பட்ட பனிச்சையடி ‘ஐ’ வலய இரண்டாம் குறுக்கு வீதியினை தார் வீதியாக அபிவிருத்தி செய்யும் பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.மட்டக்களப்பு மாநகர சபையின் 2022ம் ஆண்டுக்கான பாதீட்டு நிதியின் ஊடாக மட்டக்களப்பு மாநகர சபையின் 02ம் வட்டார உறுப்பினர் திருமதி பற்றிமா பால்தசார் அவர்களின் பாதீட்டு முன்மொழிவுக்கு அமைய 2 மில்லியன் ரூபா செலவில் குறித்த வீதியானது அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபையின் சொந்த நிதியில் 4 மீற்றர் அகலமும் 220 மீற்றர் நீளமும் கொண்ட வீதியாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.மாநகர சபையினை தமிழ் தேசியக் கூட்டமைப்பானது பொறுப்பேற்ற காலம் தொடக்கம் பல்வேறு அபிவிருத்தி பணிகளை வௌ;வேறு திட்டங்களின் ஊடாக செயற்படுத்தி வருவதாகவும் அதன் தொடர்ச்சியாக தற்போது மாநகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது பதில் முதல்வர் க.சத்தியசீலன் கருத்து தெரிவித்தார்.

வீதியின் அபிவிருத்தி பணிகளை மட்டக்களப்பு மாநகர சபையின் பதில் முதல்வர் கந்தசாமி சத்தியசீலன், மாநகர சபையின் உறுப்பினர்களான திருமதி பற்றிமா பால்தசார், சீ.ஜெயந்திரகுமார், பு.ரூபராஜ். மாநகர சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் டி.ஜே.கிறிஷ்டிராஜ் ஆகியோர் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தனர்.