திருகோணமலை மூதூரில் பட்டிப்பொங்கல் நிகழ்வுகள் இன்றைய தினம் சிறப்பாக இடம்பெற்றதை அவதானிக்க முடிந்தது.
உழவுக்கும், உலக இயக்கத்திற்கும் உதவும் சூரியனுக்கு, தைப்பொங்கல் தினத்தன்று, பொங்கலிட்டு நன்றி செலுத்தும்
தமிழர் பண்பாட்டில், உழவுக்கு உதவி புரியும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் பட்டிப்பொங்கல் நிகழ்வு இன்றாகும்.

மூதூரில் உள்ள கால்நடை வளர்ப்பாளர்கள், தமது வீடுகளில் உள்ள மாடுகளை குளிப்பாட்டி, பூமாலை அணிவித்து, அவற்றிற்கு
பொங்கலிட்டு நன்றி செலுத்திக்கொண்டனர்.