திருமண பந்தத்தில் இணைந்தார் இந்திய வீரர் பும்ரா

0
151

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா திங்கட்கிழமை திருமண பந்தத்தில் இணைந்தார்.

பும்ரா – மொடல் அழகியும் தொலைக்காட்சி தொகுப்பாளினியுமான சஞ்சனா கணேசன் என்பவரை திருமணம் செய்துள்ளார்.

இருவரதும் திருமண நிகழ்வு கோவாவில் இடம்பெற்றது.

மட்டுப்படுத்தப்பட்ட விருந்தினர்களுடன் குறித்த திருமணம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருவருக்குமிடையில் திருமணம் இடம்பெற்றதையடுத்து முதலாவது படத்தை பும்ரா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.