திருமண விழாவில் இனிப்பு பண்டம் உட்கொண்ட 150 பேர் திடீர் சுகவீனம்!

0
6

உத்தரப்பிரதேச மாநிலம் மொராபாத்தில் திருமண விழா ஒன்றில் இனிப்பு பண்டம் (கேரட் அல்வா) சாப்பிட 150 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.திருமண நிகழ்ச்சியில் இரவு விருந்தின்போது சைவம் மற்றும் அசைவம் இரண்டும் பரிமாறப்பட்டது.இதன்போது இனிப்பு பண்டமும் (கேரட் அல்வா) வழங்கப்பட்டது .

இரவு உணவு உட்கொண்டதன் பின்னர் சில விருந்தினர்கள் சுகவீன முற்றுள்ளனர்.இந்த நிலையில் அவர்கள் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.விருந்தில் சுமார் 400 விருந்தினர்கள் கலந்துகொண்டனர். அவர்களில் 150 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.இனிப்பு பண்டத்தைத் தயாரிக்கும்போது அதில் கலப்படம் செய்யப்பட்டதால் இந்த பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரியவந்துள்ளது .