கஹதுடுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியவர்களில், இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீட்டில் வசித்து வந்த 41 வயதுடைய நபரும் 38 வயதுடைய அவரது மனைவியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீ விபத்து ஏற்பட்டதில் பலத்த காயமடைந்த குறித்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இவர்களது இரண்டு பிள்ளைகளும் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.