தீர்வை வரியின்றி இந்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட ஒரு தொகை புகைத்தல் பொருட்களுடன் ஒருவர் கைது

0
140

தீர்வை வரியின்றி இந்நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட ஒரு தொகை புகைத்தற் பொருட்களுடன் எருவ்வல பிரதேசத்தை சேர்ந்த 42 வயது நபரை கொழும்பு பிலியந்தலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கொழும்பு பிலியந்தலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எருவ்வல பிரதேசத்தில் வைத்து குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதன்போது 2640 புகைத்தற் பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.