துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வர்த்தகர் உயிரிழப்பு

0
117

கொழும்பு – ஹங்வெல்ல பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (18) துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர் 46 வயதுடைய ஹங்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவராவார்.
உயிரிழந்த நபர் உணவு பொருள் விற்பனை நிலையத்தின் உரிமையாளர் ஒருவர் எனவும் அவர் வர்த்தக நிலையத்தில் இருந்தபோது இந்த துப்பாக்சிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து குறித்த நபர் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களை கைதுசெய்வதற்கு ஹங்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.