துஷ்பிரயோக குற்றவாளிக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை

0
93

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளி ஒருவருக்கு நுவரெலியா மேல் நீதிமன்றம் 10 வருட கடூழிய சிறைத்தண்டனையை விதித்துள்ளது.

நானுஓயாவில் வசிக்கும் 52 வயதுடைய நபருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி விராஜ் வீரசூரிய இந்த உத்தரவை வழங்கினார்.

2011ஆம் ஆண்டு, சந்தேகநபர் துஷ்பிரயோகம் செய்ததாக சிறுமியின் பெற்றோர் நானுஓயா பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட அப்போதைய பாடசாலை மாணவிக்கு 5 இலட்சம் ரூபா நட்டஈட்டை வழங்குமாறு சந்தேகநபருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த தொகையை செலுத்தாவிட்டால், சந்தேக நபருக்கு கூடுதலாக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தும் தீர்ப்பளிக்கப்பட்டது.

அத்துடன், 15,000 ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும், அதனை செலுத்தாவிட்டால், 03 மாத கடூழிய சிறைத்தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

13 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக கிடைத்த சாட்சியங்களை பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.