தெஹியந்தர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு!

0
75
தெஹியந்தர பொலிஸ் நிலையப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில், ரதாவெல, தெய்ந்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபர் நேற்று மாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் வீடு மற்றும் விற்பனை நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, உள்​​நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, 13 தோட்டாக்கள் மற்றும் வெற்று தோட்டாக்கள் 06 என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.மேலும், 05 லீற்றர் 750 மில்லிலீற்றர் சட்டவிரோத மதுபானம், 45 கஞ்சா கலந்த போதை மாத்திரைகள், 01 தந்தம், 324 கிராம் வெடி மருந்து, 01 ஹக்கபட்டாஸ், 03 மான் கொம்புகள், 04 கிலோகிராம் காட்டுப்பன்றி இறைச்சி, 1,600 சீனப்பட்டாஸ் என்பன பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 36 வயதுடைய ரதாவெல, தெஹியந்தர பிரதேசத்தை சேர்ந்தவராவார்.