எந்தவொரு அரசியல் கட்சியிலிருந்தும் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஏற்கமாட்டேன் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, அரசியல் கட்சியொன்றின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தாம் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிவித்த தகவலுக்கு ஜனக ரத்நாயக்க கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் கஞ்சன விஜசேகரவின் இது தொடர்பான அறிக்கையானது இலங்கையின் ஒரு பொதுவான அரசியல்வாதிக்கு சிறந்த உதாரணம் என ஜனக ரத்நாயக்க, தெரிவித்துள்ளார்.
அவர்கள் மக்களுக்காக மட்டுமே வேலை செய்கிறார்கள், ஏனென்றால் அவர்களிடம் ஒரு மறைக்கப்பட்ட நிகழ்ச்சி உள்ளது.
ஆனால் நான் மக்களுக்காக ஒரு உண்மையான நோக்கத்துடன் வேலை செய்கிறேன், அதனை அவர்களால் கூட நம்ப முடியாது என ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.