வெள்ளவத்தையில் நேற்று தொடருந்தில் மோதுண்டு 20 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது சகோதரி காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெள்ளவத்தை பொலிஸ் உயிர்காப்பு பிரிவுக்கு அருகில், கொழும்பில் இருந்து அளுத்கம நோக்கி பயணித்த தொடருந்தினால் இரண்டு யுவதிகளும் மோதப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, இரண்டு யுவதிகளும் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் யுவதிய உடபுஸ்ஸல்லாவ பகுதியைச் சேர்ந்தவரென பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.