தொலைக்காட்சி நாடக மற்றும் திரைப்பட இயக்குனர் கடத்தப்பட்டு தாக்குதல்

0
118

தொலைக்காட்சி நாடகம் மற்றும் திரைப்பட இயக்குனர் காமினி பிரியந்த இன்று வெலிமடை நகரில் சிலரால் கடத்தப்பட்டு கொடூரமான முறையில் தாக்கப்பட்டு ஹப்புத்தளை வீதியில் விடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

அவர் கடத்தப்பட்ட சி.சி.டி.வி காட்சிகளையும், கடத்தப்பட்டபோது வாகனத்தில் வைத்து தாக்கப்பட்ட காட்சிகளையும் பொலிஸார் வெளியிட்டனர்.

வெலிமடை பிரதேசத்தை சேர்ந்த ஒருவருடன் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தக் கடத்தல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.