பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி மாரடைப்பு காரணமாக அவரது 57 ஆவது வயதில் காலமானார்.
சென்னை விருகம்பாக்கம் வீட்டில் வசித்துவந்த மயில்சாமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் போரூர் ராமசந்திரா வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த வைத்தியர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்தியாவின் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் மயில்சாமி.
இவர் 1965 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி பிறந்தார்.
இவர் நடிகர், நகைச்சுவை நடிகன், நிகழ்ச்சி தொகுப்பாளர், சமூக சேவகர் என்ற பன்முகங்களை கொண்டவர்.
இவர் 1984ஆம் ஆண்டு தாவணி கனவுகள் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இதையடுத்து 1985 ஆம் ஆண்டு கன்னிராசி படத்திலும் டெலிவரி போய் வேடத்தில் நடித்திருந்தார்.
இவர் இறுதியாக நடித்த படம் உடன்பால் எனும் படம். இவருக்கு ஆன்மீகத்தில் அதிகம் நாட்டம் உள்ளது.
2021 ஆம் ஆண்டு விருகம்பாக்கம் சட்டசபை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி கண்டார்.
சமூக உணர்வு, சமூக அக்கறை கொண்ட மயில்சாமி கொரோனா காலகட்டத்தில் தனது விருகம்பாக்கம் தொகுதியில் ஏராளமான நலத்திட்ட உதவிகளை செய்திருந்தார்.