நடிகர் கலையரசன் நடிக்கும் ‘ டிரெண்டிங் ‘ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

0
5

தமிழ் திரையுலகில் குணச்சித்திர நடிகராக அறிமுகமாகி கதையின் நாயகர்களில் ஒருவராக உயர்ந்த நடிகர் கலையரசன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ டிரெண்டிங் ‘ எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இயக்குநர் என். சிவராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ டிரெண்டிங் ‘ எனும் திரைப்படத்தில் கலையரசன், பிரியாலயா, பெசன்ட் நகர் ரவி,  பிரேம்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பிரவீண் பாலு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார்.‌ இணையதள மோசடியை பின்னணியாக கொண்டு தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ராம் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் பேர்ஃபுட் புரொடக்சன் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர் மீனாட்சி ஆனந்த் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூலை மாதம் 18 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.