நடிகர் ராம் பொத்தனேனி நடிக்கும் ‘ஸ்கந்தா’

0
210

‘தி வாரியர்’ எனும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமான தெலுங்கு நடிகர் ராம் பொத்தனேனி கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய படத்திற்கு, ‘ஸ்கந்தா’ என பெயரிடப்பட்டு, டைட்டிலுக்கான பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.

தெலுங்கின் முன்னணி நட்சத்திர இயக்குநரான பொயப்படி சீனு இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘ஸ்கந்தா’. இதில் ராம் பொத்தனேனி கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீ லீலா நடித்திருக்கிறார். சந்தோஷ் டிடேக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைத்திருக்கிறார். பொழுதுபோக்கு சித்திரமாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஜி ஸ்டுடியோஸ் உடன் இணைந்து பவன் குமார் வழங்குகிறார்.

பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தின் டைட்டில் மற்றும் டைட்டிலுக்கான பிரத்யேக காணொளி ஆகியவை வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் வழக்கம் போல் எக்சன் காட்சிகள் இடம் பிடித்திருப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.