நபர் ஒருவரை சுட்டுக்கொலை செய்த சம்பவம் – இருவருக்கு மரண தண்டனை!

0
71

20 ஆண்டுகளுக்கு முன்னர், பெலியத்த, கெடமான்ன பிரதேசத்தில், நபர் ஒருவரை சுட்டுக்கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவருக்கு, தங்காலை உயர் நீதிமன்றம், இன்று, மரண தண்டனை விதித்துள்ளது.

கெடமான்ன பிரதேசத்தை சேர்ந்த 55 வயதான பியதிலக மற்றும் 38 வயதான ருவன் தரங்க என்ற, ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்களுக்கு, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2004 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி சம்பவம் பதிவான நிலையில், பிரதான சந்தேக நபரான பியதிலக, பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபரை, வைத்தியசாலையில் அனுமதிக்க அழைத்துச் செல்ல விடாமல் இடையூறு செய்ததாக கூறப்படும் ருவன் தரங்க என்ற சந்தேக நபரும், பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தில், பியதிலக்க என்ற சந்தேக நபரின், மனைவியின் சகோதர் உயிரிழந்திருந்தார்.

இவ்வாறான நிலையில், வழக்கு விசாரணைகள் இடம்பெற்று, இன்று, தங்காலை உயர் நீதிமன்றம், இருவருக்கும் மரண தண்டனை விதித்துள்ளது.