நயன்தாராவின் “அன்னபூரணி” விரைவில்

0
106

இந்திய திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா தற்போது இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி இருக்கும் அன்னபூரணி என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தின் தலைப்பு மற்றும் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

நயன்தாராவின் 75-வது படமாக உருவாகி இருக்கும் அன்னபூரணி தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் தயாராகி உள்ளது. இந்த படத்தில் நடிகர் ஜெய் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த படம் டிசம்பர் 1ஆம் திகதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இத்திரைப்படத்தில் சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்ரவர்த்தி, கே.எஸ்.ரவிகுமார், ரேணுகா, பூர்ணிமா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜீ ஸ்டூடியோஸ், நாட் ஸ்டூடியோஸ், டிரைடன்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.