நாடளாவிய ரீதியில் வாக்குச்சீட்டு விநியோகம்!

0
59

ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டு விநியோகம் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் 51 வீத வாக்குச் சீட்டுகள் ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறிப்பாக நேற்றைய தினம் மாத்திரம் 3.3 மில்லியன் வாக்குச்சீட்டுகள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டதாக தபால் மா அதிபர் தெரிவித்தார்.

இதுவரை மொத்தம் 8.7 மில்லியன் வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள சீட்டுகள் இம்மாதம் 14ஆம் திகதி வரை தபால் ஊழியர்களால் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், 14ஆம் திகதிக்குள் வாக்குச் சீட்டுகள் பெறாத நபர்கள் தங்களது அடையாளத்தை உள்ளூர் அஞ்சல் விநியோக அலுவலகத்தில் சரிபார்த்து வாக்குச் சீட்டுகளைப் பெறலாம் என்றும் தபால் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.