நாட்டின் பொருளாதார நெருக்கடியால் சுகாதாரத்துறை தளம்பலடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது- வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம்

0
227

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மேலும் அதிகரித்து சுகாதாரத்துறையை முற்றாக தளம்பலடைய செய்யும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்தியக் குழு மற்றும் ஊடகக் குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்.

பொருட்களின் விலையேற்றம் காரணாமக மக்கள் சுமைகளுக்கு தள்ளப்பட்டுள்ளனர்

இதனால் பல்வேறு சேவைகள் துண்டிக்கப்படவுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.