நாட்டில் 45,600 டெங்கு நோயாளர்கள் பதிவு !

0
22

நாட்டில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 45,600 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. 

கடந்த நவம்பர் மாதத்தில் மாத்திரம் 3,178 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சமூக வைத்திய நிபுணர் லஹிரு கொடித்துவகக்கு தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பல நோய்கள் பரவக்கூடிய வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.  

அதன்படி, இரண்டு நாட்களுக்கும் அதிகமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தால் வைத்தியரின் ஆலோசனையை பெற வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.