நாட்டில் அதிகரிக்கும் வெப்பம்! – பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0
115

நாளைய தினம் பல பகுதிகளில் வெப்பம் அவதானம் செலுத்த வேண்டிய அளவில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அந்த திணைக்களம் இன்று பிற்பகல் வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் ,இரத்தினபுரி, அநுராதபுரம், மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் சில இடங்களிலும் மனித உடலில் உணரும் அளவிற்கு வெப்பநிலை காணப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.