26 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

நாட்டில் ஒமிக்ரோன் தொற்று பரவல் குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

நாட்டில் 100 சதவீதம் ஒமிக்ரோன் தொற்றுப் பரவியுள்ளது. முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாதவர்களால் ஒமிக்ரோன் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெற முடியாது என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவின் விசேட மருத்துவ நிபுணர் அன்ரனி மென்டிஸ் தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
‘நாட்டில் 100 சதவீதம் ஒமிக்ரோன் பரவல் காணப்படுகிறது.
தற்போது வைத்தியசாலைகளில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்படும் தொற்றாளர்கள் அனைவரும் எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளாதவர்களாகவே உள்ளனர். தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாமல் ஒமிக்ரோனிடமிருந்து தப்பிக்க முடியாது.
காரணம் இரு கட்ட தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்கள் கூட அதிதீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்படுகின்றனர்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் மூன்று கட்ட தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்ட ஒரு தொற்றாளர் சிகிச்சை பெற்று வருகின்றார். எனினும், இவர் நீண்ட காலமாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவராவார்.
எவ்வாறிருப்பினும் இவர் மூன்று தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டுள்ளமையால் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவார் என நாம் நம்புகின்றோம் என்ற கூறினார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles