நாட்டில் கஞ்சா பயிர்ச் செய்கையை சட்டபூர்வமாக்கும் முயற்சியில் அமைச்சரவை ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை வட்டார தகவல்களின்படி, ஏற்றுமதி மற்றும் மருத்துவ நோக்கங்களுக்காக கஞ்சா பயிர்ச் செய்கையை சட்டபூர்வமாக்குவது தொடர்பான சிறப்பு அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அவதானிப்புகளுக்கு அமைச்சரவை அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கான சட்ட ஏற்பாடுகள் தயாரானதும் அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டு, விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.