நாட்டில் கொரோனா தொற்று அதிகரிப்பு!

0
160

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
எனினும் இந்நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் எனவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், தற்போது நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகிறது என்றார்.
5 மில்லியன் பூஸ்டர் தடுப்பூசிகள் தற்போது கிடைத்துள்ளன.
எவ்வாறாயினும் இதற்கு முன்னர் கடந்த வருடம் ஜூலை, ஓகஸ்ட் மாதங்களில் கொரோனா வைரஸால் நாடு பாரதூரமான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்திருந்தது. இதன்போது நாம் பெற்றுக்கொண்ட அனுபவம் தற்போதைய நிலைமைகளைக் கையாள்வதற்கு உதவும்.
எனவே நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் எனவும் அவர் கூறினார்.
தற்போதைய நிலைமைகளை கண்டு மக்கள் அச்சப்படத் தேவையில்லை.
பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுகொள்வதே இதற்குரிய தீர்வு எனவும் தெரிவித்தார்.