சர்வதேச நாணய நிதியம் (IMF) நடைமுறைத் திட்டத்தின் மூன்றாவது பணக் கொடுப்பனவுக்கான ஒப்பந்தத்தில் ஜூன் 12ம் திகதி கைச்சாத்திடவுள்ளது. ஆனால், இலங்கை தனது பொருளாதார மீட்புக்கான அடிப்படை நல்லாட்சியினை முன்னேற்றுவதற்கு தவறிவிட்டது.
சமீபத்திய வெரிட்டே நிறுவனத்தின் IMF கண்காணிப்பானின் 2024 மே மாத தரவுகளின் அடிப்படையில், டிசம்பர் 2023இல் புதிப்பிக்கப்பட்ட திட்டத்தின்படி, 25%வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
இத்திட்டத்தில் முடிக்கப்படவேண்டிய 63 வாக்குறுதிகளில் 32 வாக்குறுதிகள் நிறைவேற்றபட்டும், 16 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமலும், 15 அறியப்படாமலும் உள்ளது. (தரவுகள் கிடைக்காததால் உண்மைத்தன்மையினை கண்டறிய முடியவில்லை.)
நிறைவேற்றப்படாத 16 வாக்குறுதிகளை ஆராயும்போது நல்லாட்சியில் தோல்வி ஏற்படும் என்ற முடிவுக்கு வந்துள்ளது.
16 வாக்குறுதிகளையும் ஆய்வு செய்யும்போது அவற்றில் 7 நிதி முகாமைத்துவம், 6 நிதி வெளிப்படைத்தன்மை, 3 ஊழல் எதிர்ப்பு அளவீடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.