நாட்டை வந்தடைந்தது மசகு எண்ணெய் கப்பல்

0
100

நாட்டை வந்தடைந்த மசகு எண்ணெய் தொகையில் இருந்து பெறப்படும் மாதிரி இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.
100,000 மெற்றிக் டன் மசகு எண்ணெய் அடங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது.
அதன் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் அதனை தரையிறக்கும் பணிகள் முன்னெடுக்கப்படும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
அத்துடன் 120,000 மெற்றிக் டன் மசகு எண்ணெய் அடங்கிய இரண்டாவது கப்பல் எதிர்வரும் 23 முதல் 29ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதிக்குள் நாட்டை வந்தடையும் என அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், சுத்திகரிப்பு பணிகள் அடுத்த வாரத்தின் நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படும் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.