முத்துராஜவெல பெற்றோலிய முனையத்திலிருந்து பெற்றோல், டீசல் விநியோகங்கள் இடை நிறுத்தப்பட்டுள்ளது. இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனத்தின், தனியார் தாங்கிகள் உரிமையாளர் சங்கத்தின் இணை செயலாளர் டீ.வீ சாந்த சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். எனவே நாளை முதல் பேருந்து சேவையை 50 சதவீதமாக குறைக்க வேண்டும் எனவும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.