நிதி ஆணைக்குழுவின் விதந்துரைகளுக்கு அமைச்சரவை அனுமதி!

0
43

இவ் ஆண்டின் நிதி ஆணைக்குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விதந்துரைகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவைப்பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் அமைந்துள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்றது. அதன் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மாகாண சபைகளுக்கு தேவையான வளத் தேவைகள் தொடர்பாகவும், மாகாண சபைகளுக்காக தேசிய பாதீட்டில் ஒதுக்கீடு செய்யப்படும் நிதிக்கொடைகள் ஒவ்வொரு மாகாண சபைகளுக்கும் ஒதுக்கீடு செய்து வழங்கும் கோட்பாட்டு தொடர்பாகவும் விதந்துரைகளைச் சமர்ப்பித்தல் நிதி ஆணைக்குழுவுக்கு உரித்தளிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய ஒவ்வொரு மாகாண சபைக்காகவும் 2025 ஆண்டின் தேசிய பாதீட்டின் மூலம் ஒதுக்கீடு செய்து வழங்குவதற்காக நிதி ஆணைக்குழுவால் விதந்துரை செய்யப்படும் மீண்டெழும் மற்றும் மூலதனச் செலவுத் தேவைகள் அடங்கிய அறிக்கை மேற்குறித்த ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.