நுண்நிதித்துறை ஒழுங்குபடுத்தப்படும்: செஹான் சேமசிங்க

0
109

இந்த வருடத்தின் முதல் காலாண்டில் இந்நாட்டு நுண்நிதித்துறை ஒழுங்குபடுத்தப்படும் என பதில் நிதியமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், நுண்கடன் துறையில் அதிகளவு பயன்பெறுவது

சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களின் நிதித் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உத்திரவாத முறையொன்று எதிர்வரும் காலங்களில் அறிமுகப்படுத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, அனைத்து வர்த்தகர்களும் வற் வரி செலுத்தினால் தற்போதுள்ள பதினெட்டு வீதமான வட் வரியை 15 வீதமாக குறைக்க முடியும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.