நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் 3ஆம் அலகில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில், நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் 3ஆம் அலகில் கோளாறு ஏற்பட்டுள்ளது.
மேலும் அடுத்த மாதம் பழுதுபார்க்கப்படவிருந்த ஜெனரேட்டர் இயந்திரமே தற்போது செயலிழந்துள்ளது.
எவ்வாறாயினும், டீசல் மற்றும் எரிபொருளை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் மின் உற்பத்தி நிலையங்கள் ஊடாக இலங்கை மின்சார சபை தொடர்ந்து மின்சாரத்தை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.