நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் 3 ஆவது மின்பிறப்பாக்கி இயந்திரம் செயலிழந்துள்ளதால், இன்று முதல் மின்தடை அமுலாகும் நேர இடைவெளி நீடிக்கப்படலாம் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்ககுழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். லக்ஷபான நீர் மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு, டீசல் மற்றும் உலை எண்ணெய் கொள்வனவுக்கான போதிய அளவு நிதி மின்சார சபையிடம் இன்மை மற்றும் நீர் மின் முகாமை ஆகிய காரணங்களால் மின்வெட்டை நீடிக்குமாறு இலங்கை மின்சார சபையினால் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட மசகு எண்ணெய்யில் உள்ள உலை எண்ணெய் அதிக அளவு கந்தகத்தை கொண்டுள்ளது என்றும் அதனை மின் உற்பத்தி நிலையங்களில் மின்சாரம் தயாரிக்க பயன்படுத்த முடியாது’ என்றும் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். புதிய கையிருப்பு மசகு எண்ணெய் மின்சார சபையினால் இறக்குமதி செய்யப்பட்டதாகத் தெரிவித்த ஜனக்க ரத்னாயக்க, அதனால் எந்தப் பயனும் இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறான நிலையில், தற்போது நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் 3 ஆவது இயந்திரத்தில் பழுது ஏற்பட்டுள்ளதால், மின்வெட்டு மேலும் நீடிக்கலாம் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.