நைஜீரியாவில் எரிபொருள் கொள்கலன் வெடித்து விபத்து!

0
67

நைஜீரியாவில் எரிபொருள் கொள்கலன் தாங்கியுடன் ட்ரக் ஒன்று மோதி நேற்று விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் ட்ரக்கில் பயணித்த 48 பேர் உயிரிழந்துள்ளனர்.
எரிபொருள் கொள்கலன் தாங்கியுடன் ட்ரக் நேருக்குநேர் மோதி விபத்து சம்பவித்துள்ளது.

இதனிடையே எரிபொருள் கொள்கலன் தாங்கியுடன் இணைத்து கால்நடைகள் கொண்டு செல்லப்பட்ட நிலையில் 50 ற்கும் மேற்பட்ட கால்நடைகளும் உடல்கருகி உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
நைஜீரியாவில் வீதிப் போக்குவரத்தில் காணப்படுகின்ற குறைபாடுகள் காரணமாக எரிபொருள் கொள்கலன்கள் கொண்டு செல்லப்படும்போது விபத்துக்கள் இடம்பெறுவதாக சர்வதேச செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன.