நோயால் வாடும் நடிகை சமந்தா..

0
107

நடிகை சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மெதுவாக மீண்டு வந்துகொண்டு இருக்கிறார். அவ்வப்போது தன்னுடைய மருத்துவ சிகிச்சையின் புகைப்படங்களும், ஜிம்மில் ஒர்கவுட் செய்யும் வீடியோகளையும் பதிவு செய்து வருகிறார். இப்படி சமூக வலைத்தளங்கள் மூலம் சமந்தாவின் தற்போது நிலைபற்றி ஓரளவு நமக்கு தெரியும்.இதனால் படப்பிடிப்பு தலத்திலும் பாதிப்பு ஏற்படுகிறதாம். இப்படியொரு நிலையில் தான் கடுமையான சண்டை காட்சியில் நடித்துள்ளாராம் சமந்தா. ஆம், நடிகை சமந்தா தற்போது பாலிவுட்டில் உருவாகி வரும் சிட்டாடல் எனும் வெப் தொடரில் நடித்து வருகிறார்இந்த வெப் தொடரை ராஜ் மற்றும் டிகே இணைந்து இயக்குகிறார்கள். இவர்கள் இயக்கத்தில் ஏற்கனவே வெளிவந்த தி பேமிலி மேன் 2 தொடரில் சமந்தா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த சிட்டாடல் வெப் தொடரில் இடம்பெறும் கடுமையான சண்டை காட்சி ஒன்றில், தனது உடல்நிலை மோசமாக இருக்கிறது என்று தெரிந்தும் டூப் போடாமல் நடித்துள்ளார் சமந்தா. அந்த சண்டை காட்சியை முழுமையாக நடித்து முடித்துவிட்டு, திடீரென மயங்கி விழுந்துவிட்டாராம்.சமந்தா மயக்கம் போட்டு கீழே விழுந்தவுடன் படக்குழுவினர் அனைவரும் அதிர்ச்சியில் பதறிப்போய்விட்டார்களாம். இதன்பின் அவரை மருத்துவமனையில் அனுமதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.தன்னுடைய உடல் நிலை சரியில்லை என்று தெரிந்தும் டூப் போடாமல் சமந்தா அந்த சண்டை காட்சியில் நடித்தது மிகப்பெரிய விஷயம் என ரசிகர்கள் சமந்தாவை பாராட்டி வருகிறார்கள். அதே போல் உடல்நலத்தில் கவனம் தேவை என்றும், விரைவில் சமந்தா முழுமையாக குணமடைய வேண்டும் என கூறி வருகிறார்கள்.